கண்ணபிரான் வெண்ணெயைத் திருடித் தின்று, மண்ணைத் தின்று, கோபியரை மயக்கி வளர்ந்த ஸ்தலம். வாயில் உலகத்தைக் காட்டியது, பூதகி என்னும் அரக்கியைக் கொன்றது உள்ளிட்ட பல திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம். ஆழ்வார்கள் பாடிய கோயில்களோ, மூர்த்திகளோ இப்போது இல்லை. தற்போது உள்ளவை பிற்காலத்தைச் சேர்ந்தவை.
மூலவர் மனமோஹன கிருஷ்ணன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். ருக்மிணி, ஸத்யபாமா என்று இரண்டு தாயார் உள்ளனர். பகவான் நந்தகோபருக்கு பிரத்யக்ஷம்.
'கோகுல்' என்ற இடத்துக்கு 1 கி.மீ. தூரத்தில் 'புரானா கோகுல்' (பழைய கோகுலம்) என்ற இடத்தில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வாசலிலேயே யமுனை நதி ஓடுகிறது. நந்தகோபர், யசோதா, பலராமர், ஒரு சிறிய மரத்தொட்டிலில் குழந்தை கிருஷ்ணன் உள்ளிட்ட மர விக்கிரகங்கள் உள்ளன.
பெரியாழ்வார் 10 பாசுரங்களும், ஆண்டாள் 5 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 7 பாசுரங்களுமாக மொத்தம் 22 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|